செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 ஜூலை 2024 (08:05 IST)

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது? நாசா என்ன சொல்கிறது?

Sunita Williams
சர்வதேச விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் திட்டமிட்டபடி இன்னும் பூமிக்கு திரும்பாத நிலையில் அவர் பூமிக்கு திரும்ப இன்னும் இரண்டு வாரங்கள் ஆக வாய்ப்பு இருப்பதாக நாசா கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டார் லைனர் என்னும் தனியார் நிறுவனம் கடந்த மாதம் சுனிதா வில்லியம்ஸ் உட்பட இரண்டு பேரை விண்வெளிக்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த பயணம் வெற்றிகரமாக இருந்ததாக கூறப்பட்டது.

ஆனால் திடீரென சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் சென்ற விண்வெளி வீரர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் என்று கூறப்பட்டது. கடந்த மாதம் 14ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் உட்பட இருவரும் பூமிக்கு திரும்பி இருக்க வேண்டிய நிலையில் ஸ்டார் லைனில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசையை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஆகியவை காரணமாக ஜூன் 26 ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் மீண்டும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதை அடுத்து இருவரும் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதால் விஞ்ஞானிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜூலை இரண்டாம் தேதி சுனிதா வில்லியம்ஸ் உட்பட இரண்டு வீரர்களும் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர்கள் பூமிக்கு திரும்ப இன்னும் இரண்டு வாரங்கள் ஆகலாம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva