1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஜூன் 2024 (08:22 IST)

3வது முறையாக விண்வெளி பயணம் செய்தார் சுனிதா வில்லியம்ஸ்.. குவியும் பாராட்டுக்கள்..!

சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக சர்வதேச விண்வெளி  மையத்திற்கு பயணம் செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்றிரவு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணத்திற்கு புறப்பட்டார் என்றும், அவர் அட்லஸ் வி ராக்கெட் மூலம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளிக்கு கிளம்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும்  நாசா விண்வெளி வீரர் பட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்ல இருந்த நிலையில் அவருடைய பயணம் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்து. கவுண்ட் டவுன் தொடங்கிய  பின்னர்  திடீரென  விண்கலத்தை ஏவக்கூடிய எந்திரங்களின் செயல்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நேற்றிரவு மீண்டும் சுனிதா விண்வெளி பயணம் செய்துள்ளார்.
 
Edited by Siva