திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (13:51 IST)

திருமண நிகழ்ச்சியில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் அழித்த புகைப்பட கலைஞர்… ஏன் தெரியுமா?

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற அந்த பெண் புகைப்படக் கலைஞர் கொஞ்சம் கூட இடைவெளியே இல்லாமல் புகைப்படங்களை எடுத்துள்ளார்.

அமெரிக்காவில் பெண் புகைப்படக் கலைஞர் தன் நண்பரின் திருமணத்தை புகைப்படம் எடுத்துத் தர சம்மதித்துள்ளார். ஆனால் அவர் தொழில் ரீதியான திருமண புகைப்படக் கலைஞர் இல்லை. நண்பருக்காக இதை குறைந்த ஊதியத்தில் செய்ய சம்மதித்துள்ளார்.

ஆனால் திருமணத்தன்று அவருக்கு உணவுத் தராமல் தொடர்ந்து புகைப்படம் எடுக்க சொல்லியுள்ளனர். இதனால் பசியின் ஆத்திரத்தில் மணமகனின் கண் முன்னாலேயே அவர் எடுத்த அனைத்துப் புகைப்படங்களையும் அழித்துள்ளார். இது பற்றி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட அது உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது.