1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 4 நவம்பர் 2020 (13:13 IST)

தேர்தல் முடிவுகளில் சிக்கல் ஏற்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என்பதும் அமெரிக்க அதிபர்  வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட சமமான இடங்களைப் பெற்று வருகின்றனர் என்பதும், இருப்பினும் ஜோ பைடன் சற்று அதிகமான தொகுதிகளைப் பெற்றுள்ளார் என்பதும் தெரிந்தது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உரை நிகழ்த்தியுள்ளார். அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அவருடைய உரை மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. இந்த உரையில் அவர் ’நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளோம். குறிப்பாக டெக்சாஸ், ஜார்ஜியா மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளோம் பென்சில்வேனியாவிலும் நாம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம்
 
என்னை பொருத்தவரை இந்த தேர்தலில் நாம் தான் நல்ல வெற்றியை பெற்றுள்ளோம். ஒருவேளை தேர்தல் முடிவுகளில் சிக்கல் ஏற்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று டிரம்ப் கூறியுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சற்றுமுன் வரை வெளியான முடிவுகளின்படி ஜோ பைடன் 238 வாக்குகளும் டிரம்ப் 213 வாக்குகளும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது