வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (17:27 IST)

மலேசியா செல்ல இனி விசா தேவையில்லை

Malaysia 1
மலேசியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிகையை அதிகரிக்கும் வகையில் மலேசிய அரசு ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
மலேசியாவில் பிரதமர் அன்வார்  இப்ராஹிம் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்தியா,சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்காள் இனி விசா  இன்றி மலேசியாவுக்குள் நுழையலாம் எனவும் விசா இன்றி 30 நாட்கள் தங்கலாம் என தெரிவித்துள்ளது.
 
இந்தப் புதிய நடைமுறை வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும், விசா தேவையில்லிய என்றாலும், பயணிகள் குற்றப்பின்னணி, அல்லது வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்களா? என்பதை அறிய பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும் என தகவல் வெளியாகிறது.