செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (09:01 IST)

சக சிறுவர்களை துப்பாக்கியால் சுட்ட பள்ளி சிறுவன்! – அமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி!

அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 15 வயது சிறுவன் சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எந்த வித காரணமும் இல்லாமல் பொதுமக்கள் கூடும் இடங்களில் திடீரென தோன்றும் ஆசாமிகள் பலரை சரமாரியாக சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் தினசரி நிகழ்வாகி வருகிறது.

இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் 15 வயது மாணவன் காலை 10 மணியளவில் பள்ளி வளாகத்தில் நின்றிருந்த தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

இதனால் படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கியால் சுட்ட சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.