வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (07:19 IST)

அதிபர் வேட்பாளராகிறார் டிரம்ப்.. எதிர்ப்பாக இருந்த ஒரே ஒரு போட்டியாளரும் விலகல்..!

இந்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது குடியரசு கட்சியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிட்டதால் டிரம்ப்புக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. இருப்பினும் டொனால்ட் டிரம்ப் மிகவும் நம்பிக்கை உடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் நான் தான் வேட்பாளர் என்று கூறிக் கொண்டிருந்தார்

இந்நிலையில் நிக்கி ஹாலே போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக திடீரென அறிவித்துள்ளார். அவர் போட்டியில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என்றாலும் குடியரசு கட்சியின் சார்பில் வேறு யாரும் ட்ரம்புக்கு போட்டி இல்லை என்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் ட்ரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்த்து டிரம்ப்புக்கு போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva