வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 மே 2020 (08:26 IST)

அப்பாவின் காரில் அதிவேகமாக சென்ற சிறுவன்! – காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்!

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் 5 வயது சிறுவன் அதிவேகமாக காரை ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் மிக வேகமாக கார் ஒன்று சென்றிருக்கிறது. உடனடியாக அந்த காரை பின் தொடர்ந்து சென்று நிறுத்திய போலீஸ் காரை திறந்து பார்த்ததும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர். காரை ஓட்டி சென்றது 5 வயது சிறுவன். எங்கே செல்கிறாய் என விசாரித்ததில் தான் லம்போர்கினி கார் வாங்க போவதாகவும், அதற்காக தந்தையின் காரை எடுத்து செல்வதாகவும் கூறியுள்ளான்.

ஆனால் அந்த சிறுவனிடம் வெறும் 3 டாலர்கள் மட்டுமே இருந்துள்ளது. உடனடியாக சிறுவனின் பெற்றோரை வரவழைத்த போலீஸ் விசாரணை மேற்கொண்ட பிறகு சிறுவனை அவர்களோடு அனுப்பி வைத்துள்ளனர்.

மில்லியன் டாலர் பெருமானம் உள்ள லம்போர்கினி காரை வாங்க 3 டாலர்களோடு காரில் பறந்த சிறுவனின் செயல் அமெரிக்காவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.