கொரோனாவால் பள்ளிக்கூடம் பக்கமே போகாத குழந்தைகள்! – ஐநா அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதும் கொரோனாவால் பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் பல கோடி குழந்தைகள் ஒரு வருட காலமாக பள்ளிகளுக்கே செல்லவில்லை என ஐ.நா தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல நாடுகளில் பள்ளிகள் கடந்த ஒரு ஆண்டுகாலமாக மூடப்பட்டுள்ளன. இதனால் பல நாடுகளில் கோடிக்கணக்கான குழந்தைகளின் கற்றல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஐநாவின் யுனிசெஃப் நடத்திய ஆய்வில் உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் கடந்த ஒரு ஆண்டாக பள்ளி பக்கமே செல்லவில்லை என தெரிய வந்துள்ளது.
மேலும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் கடந்த 3 காலாண்டாக பள்ளி செல்லவில்லை என்றும், இதனால் 9.8 கோடி குழந்தைகளின் கல்வி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.