வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (07:26 IST)

ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

விபத்தில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து கிளம்பிய பயணிகள் விமானம் ஒன்று சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது என்பதும் அதில் பயணம் செய்த ஊழியர்கள் உள்பட 180 பேர் பலியானார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்படினும் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்திய ஒரு சில நிமிடங்களில் இந்த விபத்து ஏற்பட்டதால் இது அமெரிக்காவின் சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது 
 
இந்த நிலையில் ஈரான் ஏவுகணை தாக்குதலால்தான் உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக அமெரிக்கா கனடா போன்ற நாடுகள் சந்தேகம் கொண்டுள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் உக்ரைன் விமானத்தை ஏவுகணை தாக்குவது போன்ற வீடியோவை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தங்கள் நாட்டில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்றை தங்கள் நாட்டின் ஏவுகணையை வைத்து ஈரான் தாக்கியதா? என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு ஈரான் என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த தகவல் உண்மையாக இருந்தால் ஈரானுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது