புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (10:13 IST)

தனித்தனி கழிவறையால் சர்ச்சைக்குள்ளான உபேர் நிறுவனம்

ஆண் பெண் என இருபாலருக்கும் தனித்தனி கழிவறை இருப்பது உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம். ஆனால் உபேர் நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றில் ஊழியர்களுக்கு ஒரு கழிப்பறையும் டிரைவர்களுக்கு ஒரு கழிப்பறையும் கட்டியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 
 
உபேர் நிறுவனத்தின் தலைமை அமெரிக்க அலுவலகத்தில் ஊழியர்களுக்கு ஒரு தனி கழிப்பறையும் அங்கு பணிபுரியும் டிரைவர்களுக்கு ஒரு தனி கழிப்பறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் வாகன ஓட்டுனர்  இதனை புகைப்படம் எடுத்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 
 
ஆண்கள், பெண்கள் என்று தான் தனித்தனியாக கழிப்பறை வைக்கப்பட்டிருக்கும். ஆனால் சமூகத்தில் இரண்டு வகுப்புகளாக ஊழியர்களை பிரித்து தனித்தனி கழிவறையை அமைக்கப்பட்டிருப்பது நியாயமா? என அந்தப் பெண் வாகன ஓட்டுநர் எழுப்பிய கேள்விக்கு பெரும் ஆதரவு குவிந்தது 
 
பொதுமக்கள் மட்டுமின்றி அமெரிக்க எம்பி ஒருவரும் உபேர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உபேர் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது. இந்த நடைமுறையை தங்களது தங்கள் நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது என்றும் இந்த நடைமுறை உடனடியாக மாற்றப்படும் என்றும் இது தங்கள் கவனத்திற்கு மீறிய செயலாக நடந்து விட்டதாகவும் உபேர் நிறுவனம் பதிலளித்துள்ளது. உபேர் நிறுவனம் சமாதானம் அளித்த போதிலும் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது