விலை என்ன தெரியுமா? கின்னஸ் சாதனை படைத்த கழிவறை தொட்டி!

Sugapriya Prakash| Last Modified புதன், 6 நவம்பர் 2019 (10:40 IST)
உலகிலேயே விலை உயர்ந்த கழிவறை தொட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 
 
சீனாவில் 335 கேரட் எடையிலான 40 ஆயிரம் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட கழிவறை ஒன்று கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. வைரங்கள் பொதியப்பட்டுள்ள பகுதி புல்லட் புரூஃப் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த கழிவறை ஹாங்காங்கைச் சேர்ந்த ஆரோன் ஷம் என்ற நகைக்கடையில் தயாரிக்கப்பட்டு ஷாங்காய் நகரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை  சுமார் 10 கோடி ரூபாய்.
 
இந்தக் கழிவறைதான் உலகிலேயே விலை உயர்ந்தது என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :