மும்பை தாக்குதல் குற்றவாளி இந்தியாவிடம் ஒப்படைப்பு.. அமெரிக்க அரசு ஒப்புதல்..!
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, மும்பை தாக்குதல் குற்றவாளி இந்தியாவிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட், பிரதமர் மோடியை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர், இதில் ஆறு அமெரிக்கர்கள் அடங்குவர்.
இந்த நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிடிபட்ட நிலையில், அவர்தான் இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, ராணாவை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சமீபத்தில், அமெரிக்க உச்ச நீதிமன்றம் இதற்கான ஒப்புதலை வழங்கியது. இந்த ஒப்புதலை தொடர்ந்து, அமெரிக்க அரசும் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva