அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. டொனால்ட் டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை ..!
பிரான்ஸ் நாட்டின் பயணத்தை முடித்துவிட்டு, பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகருக்கு சென்றடைந்தார் என்றும், அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாகவும், அதனை அடுத்து ஸ்டார்லிங்க் தலைவர் எலான் மஸ்க் அவர்களை சந்திக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் வெளிநாட்டு தலைவர்களில் நான்காவது தலைவர் பிரதமர் மோடி என்பதும், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்களை வெளியேற்றுவது, இருநாட்டு நல்லுறவு, டாலரில் வர்த்தகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகள் இந்த இரு தலைவர்களின் சந்திப்பின்போது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva