வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2022 (15:20 IST)

தூத்துகுடி தொழிலதிபர் காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள்: போலீஸ் விசாரணை!

Fire
தூத்துக்குடி  தொழிலதிபருக்கு சொந்தமான காரை மர்ம நபர்கள் தீ வைத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 
 
தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்ற தொழிலதிபர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் 4 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தொழிலதிபர் வீட்டிற்கு அருகில் உள்ள அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் வீட்டின் முன்பு மர்ம நபர்கள் பட்டாசு வீசி விட்டு சென்றதாக தெரிகிறது 
 
இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இது வழக்குப்பதிவு செய்து தொழிலதிபர் காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்