சித்தப்பு நடிகரை வேண்டாம் என ஒதுக்கினாரா ‘பருத்திவீரன்’ நடிகர்!
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது.
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி கார்த்தி நடிகராக அறிமுகமான பருத்தி வீரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜி கணேசனுக்கு பிறகு முதல் படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாயகனாக கார்த்தி மாறினார். இந்த படத்தில் நடித்ததற்காக பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தைப் பார்த்து பிரமித்துப் போன பாரதிராஜா என்னை எல்லோரும் கிராமிய இயக்குனர் என்கின்றனர். ஆனால் என்னால் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியவில்லையே என நான் ஆதங்கப்பட்டேன் எனக் கூறி பாராட்டினார்.
இந்த படத்தில் நடித்த கார்த்தி, பிரியாமணி, சரவணன் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டனர். படத்தில் சித்தப்பா – மகன் காம்பினேஷனில் சரவணனும் கார்த்தியும் கலக்கி இருப்பார்கள். அதன் பிறகு அந்த கூட்டணி வேறு எந்த படத்திலும் இணைந்து நடிக்க வில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ரிலீஸான கார்த்தியின் விருமன் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சரவணனை நடிக்க வைக்க இயக்குனர் முத்தையா விரும்பினாராம். ஆனால் அதை கார்த்தி வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.