திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (10:14 IST)

இந்தி படங்களே திணறல்… ஆனால் பாலிவுட்டில் கலக்கும் தென்னிந்திய படம்!

சமீபத்தில் வெளியான கார்த்திகேயா 2 திரைப்படம் இந்தியில் வசூலைக் குவித்து வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் நிகில் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்த ‘கார்த்திகேயா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் இந்த படம் ரிலீசானது.

இந்த படம் தெலுங்கு சினிமாவில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஒரு ஹிட் படமாக அமைந்து வசூலில் கலக்கியது. இந்த படம் இந்தியிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தி படங்களே அங்கு வெற்றி பெற முடியாமல் தடுமாறி வரும் நிலையில் கார்த்திகேயா 2 கலக்கி வருகிறது. முதலில் குறைவான திரைகளில் ரிலீஸான இந்த திரைப்படம் தற்போது அதிக எண்ணிக்கையில் திரையிடப்படுகிறது.