Daily Horoscope
✕

ஏலியன்களுடன் தொடர்புகொள்ள வேண்டுமா?? துருக்கி தரும் புது ஐடியா!!

Updated: செவ்வாய், 28 நவம்பர் 2017 (17:57 IST)
எதிர்காலத்தில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ளவும், ஏலியன்களிடம் பேசுவதற்காகவும் புதிய படிப்பை துருக்கியில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. 
 
துருக்கியில் இருக்கும் அக்டேனிஸ் பல்கலைக்கழகம் யுஃபாலாஜி மற்றும் எக்ஸ்பாலிடிக்ஸ் என இதற்கு தலைப்பு வைத்துள்ளது. இந்த படிப்பு ஏலியன்களிடம் பேசுவதற்காக படிப்பு என்று கூறப்படுகிறது. 
 
இதன் மூலம் எதிர்காலத்தில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. இந்த படிப்பில் உலகில் இருக்கும் முக்கியமான மொழிகள் குறித்த தகவல்கள் பாடமாக நடத்தப்படும். மொழி தெரியாத, மொழி இல்லாத மக்களிடம் பேசுவது எப்படி என்றும் கற்றுத்தரப்படுமாம். 
 
மேலும் ஏலியன்களின் மொழியை புரிந்து கொள்வதற்கும் இது உதவுமாம். இன்னும் 10-ல் இருந்து 15 வருடத்திற்குள் இந்த படிப்புக்கு நிறைய எதிர்ப்பார்ப்பு உருவாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
தற்போது இந்த படிப்பில் சேர்வதற்கு நிறைய மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனராம். இந்த படிப்பை குறித்த தேடலின் மூலம் இது தற்போது வைரலாகி வருகிறது.

எல்லாம் காட்டு

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

திடீரென உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை.. ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு..

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை...

மத்திய அமைச்சர் எல் முருகன் ராஜினாமா? தமிழக அரசியலை கவனிக்க போவதாக அறிவிப்பு...!

அடுத்த 48 மணி நேரத்தில்!.. வடகிழக்கு பருவமழை அப்டேட் கொடுத்த வானிலை மையம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments