1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : சனி, 28 அக்டோபர் 2017 (14:13 IST)

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு நாள் ; நடிகையுடன் நடிகர் ஜல்ஷா

பிரபல பாலிவுட் நடிகை நிஹாரிகாவும் தொடர்பில் இருந்ததாக நடிகர் நவாஸூத்தின் சித்திக்கி தனது சுயசரிதை புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 

 
பாலிவுட்டில் கிளுகிளுப்பான படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் நவாஸூத்தின் சித்திக்கி. மிகவும் திறமையான நடிகர். இவர் சமீபத்தில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
 
அதில், நானும் இந்தி நடிகை நிஹாரிகா சிங்கும் மிஸ் லவ்லி என்ற படத்தில் சேர்ந்து நடித்தோம். ஒரு நாள் அவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். நானும் சென்றேன். கதவை திறந்த போது வீடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து என்னை வரவேற்றார். 


 

 
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிஹாரிகா மிகவும் அழகாக தெரிந்தார். இருவரும் படுக்கை அறைக்கு சென்று உறவு கொண்டோம். அவருடன் ஒன்றரை ஆண்டுகள் தொடர்பில் இருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
 
இதுபற்றி விளக்கம் அளித்துள்ள நிஹாரிகா ‘எங்களுக்குள் தொடர்பு இருந்தது உண்மைதான். அப்போது அவர் திருமணமானவர் என்பதை என்னிடம் மறைத்தார். அவர் ஒரு மர்மமான மனிதர். எதையும் வெளிப்படையாக பேசமாட்டார். அதனால்தான் அவரை விட்டு பிரிந்தேன். புத்தகம் விற்பனையாவதற்காக ஒரு பெண் என்றும் பாராமல் தற்போது என்னை அவமதித்துள்ளார்’ என கூறியுள்ளார்.
 
இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.