திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya
Last Updated : சனி, 16 ஜூலை 2016 (14:45 IST)

துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு: இராணுவத்தினரிடம் ஆட்சி

துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு: இராணுவத்தினரிடம் ஆட்சி

துருக்கியில் அதிபர் எர்டோகன் அரசை கவிழ்த்து விட்டு ராணுவ ஆட்சி திடீரென பிரகடனம் செய்யப்பட்டது.



துருக்கி நகரில் அதிபர் எர்டோகன் அரசை கவிழ்த்து, ராணுவ வீரர்கள் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் மாளிகை, நாடாளுமன்றம் மீது துருக்கி ராணுவத்தின் ஒரு பிரிவினர் சரமாரியாக தாக்குதல் நடத்திவருகின்றனர். இத்தாக்குதல்களுக்கு துருக்கி போலீசாரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு துருக்கிய தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான்பூலில் நடத்தபட்டு உள்ளது. இந்த மோதல்களில் மொத்தம் 90 பேர் பலியாகி உள்ளனர். துருக்கிய அதிகாரிகள்  1,500 க்கும் மேற்பட்ட இராணுவ ஊழியர்களை கைது செய்துள்ளனர். அந்நாட்டின் கிழக்கு எர்ஜின்கான் மாகாணத்தின் ராணுவ தளபதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே ராணுவப் புரட்சியை முறியடித்துவிட்டதாகவும் அரசாங்கம் தங்களது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இருந்தும், துருக்கியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.