வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2024 (07:35 IST)

இறுதிச்சடங்கு செய்த மறுநாள் உயிரோடு வீட்டுக்கு வந்த நபர்.. குஜராத்தில் ஒரு அதிசய சம்பவம்..!

குஜராத் மாநிலத்தில் இறந்ததாக கருதப்பட்ட ஒருவரின் உடல் இறுதி சடங்கு செய்த மறுநாள் அவர் திடீரென உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 43 வயது பிரிஜேஷ் என்பவர் அக்டோபர் 27ஆம் தேதி காணாமல் போன நிலையில், அவரது குடும்பம் போலீசில் புகார் அளித்தது. இந்த நிலையில், காணாமல் போய் இரண்டு வாரங்கள் கழித்து சபர்மதி பாலம் அருகே அழுகிய நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை அடையாளம் காட்டிய குடும்பத்தினர், காணாமல் போன பிரிஜேஷ் உடல் தான் என்பதை உறுதி செய்தனர்.

இதனை அடுத்து, அந்த உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. ஆனால் இறுதி சடங்கு செய்த மறுநாள், பிரிஜேஷ் திடீரென வீட்டுக்கு வந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மன அழுத்தத்தில் இருந்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தற்போது அவர் வீடு திரும்பி விட்டதாகவும், அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து, புதைக்கப்பட்ட நபரின் உடல் யாஎ என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva