திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Updated : திங்கள், 14 நவம்பர் 2016 (11:23 IST)

அமெரிக்காவில் இருந்து 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள்: டிரம்ப் சூளுரை!

அமெரிக்காவில் இருந்து 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள்: டிரம்ப் சூளுரை!

அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளவர்களில் 30 லட்சம் பேர் அங்கிருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது உலக நாடுகள் பலவற்றையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 
 
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் தன்னுடைய வெளிப்படையான, அதிரடியான பேச்சுக்களால் மக்களிடம் அதிகம் பேசப்பட்டார். இவர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அமெரிக்காவின் அதிபரானால் அமெரிக்காவில் உள்ள அகதிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவேன் என்றார்.
 
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அவரது இந்த பேச்சு. இந்நிலையில் நேற்று நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய டிரம்ப் தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியது போல் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என கூறினார்.
 
சட்ட விரோதமாக குடியேறிவர்கள், தாதாக்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கிரிமினல் பின்னணி உள்ளவர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என அவர் கூறினார். இது 20 லட்சமோ அல்லது 30 லட்சமாகவோ இருக்கலாம் என அவர் கூறினார்.