1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2024 (16:09 IST)

மணமகள் வீட்டார் மீது காரை ஏற்றிய மணமகன் உறவினர்.. திருமண வீட்டில் அதிர்ச்சி சம்பவம்..!

marriage
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த திருமண வீட்டில் மணமகள் வீட்டார் மீது மணமகனின் நண்பர் ஒருவர் கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர் அருகே ஒரு திருமணம் நடைபெற உள்ள நிலையில், மாப்பிள்ளை வீட்டார் ஊரில் இருந்து காரில் வந்துள்ளனர். அந்த காரை பார்க்கிங் செய்ய முயன்ற போது, மணமகள் வீட்டைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்ததால், காரை பார்க்கிங் செய்ய வந்த மாப்பிள்ளை தோழர் ஆத்திரமடைந்தார்.

இதையடுத்து, வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த அந்த நபர், மணமகள் வீட்டார் ஏழு பேர் மீது காரை ஏற்றியுள்ளார். இதனால் அந்த ஏழு பேரும் படுகாயம் அடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திருமணம் நல்லபடியாக நடந்ததாகவும், ஏழு பேர் மீது கார் ஏற்றிய மணமகனின் நண்பர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.


Edited by Siva