வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 21 ஜனவரி 2021 (11:31 IST)

கடைசி நாளையும் மிச்சம் வைக்காமல் மன்னிப்பை வாரி வழங்கிய ட்ரம்ப்!

ஆட்சியில் இருந்து வெளியேறும் கடைசி நாளிலும் டிரம்ப் தனக்கு நெருக்கமானவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் ட்ரம்ப் ஜனநாயக வேட்பாளர் ஜோ பிடனிடம் படுதோல்வியை சந்தித்தார். அதை தொடர்ந்து நேற்று ஜனவரி 20 ஆம் தேதி ஜோ பிடன் பதவியேற்றார். 
 
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தண்டனை குறைப்பு மற்றும் மன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். 
 
டிரம்ப் இப்படி பொது மன்னிப்பு வழங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் அவருக்கு நெருக்கமானவர்களே. இந்நிலையில் ஆட்சியில் இருந்து வெளியேறும் கடைசி நாளிலும் டிரம்ப் தனக்கு நெருக்கமானவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.
 
அதன்படி பண மோசடி வழக்கில் சிக்கிய தனது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் உள்ளிட்ட 73 பேருக்கு டிரம்ப் கடைசி நாளில் பொதுமன்னிப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.