1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2021 (23:42 IST)

டிரம்பின் 34 மாடி கட்டிடம் இடித்து தரைமட்டம்.. ரசித்துப் பார்த்த மக்கள்

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்தமான 34 மாடிக் கட்டிடன் ஒன்று இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், அப்போதைய அதிபர் டிரம்பும், அவரை எதிர்த்து ஜோ பிடனும் போட்டியிட்டனர்.

இதில், டிரம்ப் தோல்வி அடைந்தார். பின்னர் அவர் ஜோபிடனின் பதவி ஏற்பு விழாவில் கூட கலந்துகொள்ளாமல்       தனது மாளிகைக்குச் சென்றார்.

இந்நிலையில், முன்னாள் அதிபர் டிரம்புக்குச் முன்பு சொந்தமாக இருந்த  ச்34 மாடி மேசினோ இன்று இடிக்கப்பட்டுள்ளது.

நியூஜெர்சியில் அட்லாண்டிக் நகரில் 34 மாடி ஹோட்டல் மற்றும் கேசினோ இருந்த நிலையில் அது வேறோரு பகுதிக்கு இடம் மாறியது.  எனவே அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டது. இதைக் காண மக்கள் மக்கள் கூட்டம் கூடினர். கட்டிடன் இடிப்பதைக் காண அவர்களிடம் ரூ.40000 வசூலிக்கப்பட்டது.

மேலும், தொடர் திவால் வழக்குகளுக்குப் பிறகு டிரம்ப் கடந்த 2009 ஆம் ஆண்டு ஹோட்டல் கேசினோவை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.