திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (08:25 IST)

அமெரிக்க இந்துக்கள் மீது கண் வைக்கும் வேட்பாளர்கள்! – அமெரிக்க தேர்தல்!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் அமெரிக்க இந்துக்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க அமெரிக்கா வேகமாக தயாராகி வருகிறது. குடியரசு கட்சி சார்பில் நடப்பு வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடும் நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இருவரும் தேர்தல் பிரச்சாரங்களில் இந்தியர்கள் மற்றும் இந்துக்களுக்கு மதிப்பளித்து பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவில் இந்துக்களுக்கு மத சுதந்திரங்களுக்கான தடைகளில் தளர்வுகள் வழங்கப்படும் என ட்ரம்ப் தரப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையில், ஜோபிடன் தரப்பு அவர் வெற்றி பெற்றால் இந்து சமூக நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பார் என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் பிரபல அமெரிக்க இந்து தலைவர் நீலிமா கலந்து கொண்டு வேத மந்திரங்களை உச்சரித்து நிகழ்வை தொடங்கியுள்ளார். இது அமெரிக்காவில் இந்துக்களின் பெரும்பான்மையை அடையாளப்படுத்துவதாக கூறப்படுகிறது.