வியாழன், 17 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (09:22 IST)

எல்லை மீறிய இஸ்ரேல்; ஆயுத சப்ளையை நிறுத்திய இத்தாலி! - அடுத்தடுத்து ட்விஸ்ட்!

Italy PM Melony

இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ஆயுத உதவி நிறுத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்து வந்த நிலையில், இத்தாலி ஒருபடி மேலே போய் ஆயுத உதவியை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

 

 

ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதாக காசா மீது போர் தொடர்ந்த இஸ்ரேல் தற்போது வரை பெண்கள், குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை கொன்றுள்ளது. இந்த போர் விவகாரத்தில் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு துணையாக நிற்பதுடன் ஆயுத உதவிகளும் வழங்கி வருகின்றன.

 

அதேசமயம் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கும் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்து வருகின்றன. ஆனால் இஸ்ரேல் அந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் இப்படியே தன் போக்கில் செயல்பட்டால், வழங்கப்பட்டு வரும் ஆயுத உதவிகள் நிறுத்தப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 

இந்நிலையில் இத்தாலி ஒருபடி மேலே சென்று உடனடியாக இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஆயுத உதவியை நிறுத்துவது குறித்து பேசிய இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலானி “காசா பகுதியில் போர் நீடிப்பதை தொடர்ந்து இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதிக்கான அனைத்து உரிமங்களும் உடனடியாக நிறுத்தப்படுகிறது” என அறிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K