புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (15:13 IST)

கேமராவில் சிக்கிய அதிசய கரடி

உலகிலேயே இதுவரை யாரும் காணாத அதிசய கரடி ஒன்று சீனாவின் காடுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள சிச்சுவான் காட்டு பகுதியில் சுற்றுசூழல் மற்றும் விலங்கியல் ஆராய்ச்சிக்காக பல இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவான காட்சிகளை பார்த்து கொண்டிருந்தபோது அதில் வெள்ளை நிற பாண்டா கரடி ஒன்று தென்பட்டது. பொதுவாக பாண்டா கரடிகள் கருப்பு,வெள்ளை கலவையான நிறங்களில்தான் அதிகம் காணப்படும். மிகவும் அரிதாக பழுப்பு நிற பாண்டா கரடிகள் ஆங்காங்கே தென்படும். ஆனால் வெள்ளை நிறத்தில் பாண்டா ஒன்றை பார்ப்பது இதுவே முதல்முறை என ஆய்வாளர்கள் வியந்துள்ளனர்.

வெள்ளை நிறமும், சிவப்பு நிற விழிகளும் கொண்ட அந்த பாண்டாவின் வயது 2 முதல் 3 வருடங்கள் இருக்கலாம் என்கிறார்கள். இதைபோன்றே வெள்ளை நிற பாண்டாக்கள் காட்டின் மிக தூரமான பகுதிகளில் வாழலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.