வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 மே 2019 (20:04 IST)

வடகொரியாவின் கப்பலை அபகரித்த அமெரிக்கா : இருநாடுகள் இடையே பதற்றம்

அமெரிக்கா உலக நாடுகளின் அண்ணனாகவும் நாட்டாமையாகவும் உள்ளது. உலகில் எங்கு பிரச்சனை என்றாலும்  துரித்துக்கொண்டு நிற்கும் தனது வல்லரசு எனும் அதிகார மூக்கைத் நுழைப்பது அந்நாட்டின் வழக்கம்.
தற்போது கூட அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிகளவில் வரியை விதித்தார். பதிலுக்கு சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தது இதனால் ஒருநாடுகளிடையே வர்த்தகப் போர் மூண்டது. இது உலகப் பொருளாதாரத்தையே அசைத்துப் பார்த்துக்கொண்டுள்ளது.
 
இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மீறி நிலக்கரியை ஏற்றிச் சென்றதாக வடகொரியாவின் இரண்டாவது சரக்குக் கப்பலாக வைஸ் ஹாலனஸ்ட் - ஐ அமெரிக்கா பறிமுதல் செய்தது. இந்நிலையில் இதுகுறித்து தன் கண்டனத்தை தெரிவித்துள்ள வடகொரியா அமெரிக்காவை கேங்ஸ்டர் நாடு என்று விமர்சித்துள்ளது. மேலும் அமெரிக்கா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐ நா பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டெர்ரஸ் வடகொரிய தூதர் கடிதம் எழுதியுள்ளார்.
 
அமெரிக்கா ஏற்கனவே ஈரான் மீது பொருளாதாரத்தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.