ஈரானில் வலுக்கும் போராட்டம்: தலைவர்கள் சிலைக்கு தீ வைப்பு!
ஈரான் நாட்டில் பெண்களுக்கு ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு எதிராக ஈரான் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், இன்று அங்குள்ள சிலைகளுக்கு தீ வைக்கப்படுள்ளது.
ஈரான் நாட்டில் வசிக்கும் பெண்கள் 7 வயதிற்கு மேல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில், 22 வயது பெண் மாசா அமினி ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்டார்.
அவர் மீது போலீஸார் கடுமையாகத் தாக்கினர். இதில் அவர் கோமா நிலைக்குச் சென்ற நிலையில் கடந்த 17 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஈரானில் அரசுக்கு எதிராககப் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
நேற்று, குர்கிஸ்தான் உள்ளிட்ட 30 நகரங்களில் பெண்களின் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலில் 31 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், இன்று ஹிஜாப்பை எரித்தும் தலைமுடியை வெட்டியும் தங்கள் எதிர்ப்பை டதெரிவித்தனர். இவர்கள் மீது போலீஸார் கண்ணீர்புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.
இந்த நிலையில் ஈரான் தலைவர் ருஹோல்லா கொமேனியின் சிலைக்கு இன்று தீ வைக்ககப்பட்டது. இதற்கு அங்குள்ள மதத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.