1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (10:01 IST)

கருணாநிதி நினைவாக வங்க கடலில் பேனா நினைவுச் சின்னம்: மத்திய அரசு அனுமதி

karunanidhi pen
கருணாநிதி நினைவாக வங்க கடலில் பேனா நினைவுச் சின்னம்: மத்திய அரசு அனுமதி
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வங்ககடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசின் முதல் கட்ட அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னாள் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் சிலை சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 81  கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளதாகவும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை விட பெரிதாக இந்த சிலை இருக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்நிலையில் இந்த சிலை அமைப்பதற்கு மத்திய அரசு முதல் கட்ட அனுமதி கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அதன்பின் மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்ற பின் இந்த சிலை அமைக்கும் பணி நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே பல அரசியல்வாதிகள் இந்த சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது