வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (19:56 IST)

’கட்டிலில் ’ ஹாயாக படுத்திருக்கும் பாம்பு ...நடுங்கிய குடும்பத்தினர்..வைரல் புகைப்படம்

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு வீட்டில் படுக்கையில் ஒரு பாம்பு விழுந்தது. இதைக் கண்ட அந்த வீட்டுக் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதைப் படம் பிடித்து அவர்கள்  சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.
ஆஸ்திரேலியா  நாட்டில் உள்ள ஒரு வீட்டில் மேல் சீலிங்கில் மாட்டியுள்ள பல்பிலிருந்து ஒரு பாம்பு ஒன்று, கட்டிலில் போட்டிருந்த படுக்கையில் விழுந்தது.  இதைப் பார்த்த அந்த வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சன் சைன் என்ற பாம்பு மீட்பு படையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் வந்து பாம்பை வீட்டிலிருந்து அகற்றினர்.
 
 தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.