1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (18:23 IST)

வாயில் குத்துவேன்.. . செய்தி நிருபரை மிரட்டிய அதிபர்

ஊழல் குற்றச்சாட்டில் உங்கள் மனைவிக்கும் தொடர்பு உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நிருபர் ஒருவர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியா. இங்கு நிருபர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனரோவிடம் நிருபர்கள் ஊழல்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது ஒருவர் உங்கள் மனைவிக்கும் செனட்டராக இருக்கும் உங்கள் மகளுக்கும் ஊழலில்  தொடர்பு உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அதிபர், நான் உங்கள் வாயை குத்தி உடைக்க விரும்புகிறேன் என பதிலளித்துவிட்டும் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார்.