செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (17:01 IST)

சூரரைப் போற்று அமேசானில் வெளியீடு - பிரபல இயக்குநர் டுவீட்

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார். 
 
ஆனால், சூர்யாவின் முடிவால் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதோடு திரைப்பட தொழிலை நம்பியுள்ள பலரும் பாதிக்கப்படுவார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
திரைப்படம் வெளியீடு செய்த பிறகு நற்காரியங்களுக்கு நன்கொடை தருதல் அறிவோம் ஆனால் 5 கோடி நன்கொடை நன்மைகள் படம் வெளியீடு முன்னே முதல் முறையாக அறிகிறோம் #சூரரைபோற்று @PrimeVideoIN வெல்லட்டும். அடுத்த இரண்டு படங்கள் திரையரங்குகளில் ஆளட்டும் வாழ்த்துக்கள் @Suriya_offl@2D_ENTPVTLTD எனத் தெரிவித்துள்ளார்.