1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (15:26 IST)

விண்வெளிக்கு செல்லும் முதல் மனித ரோபோ!!

ரஷ்யா முதல் முதலாக மனித உருவ ரோபோவை சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று அனுப்பியுள்ளது.

கசகஸ்தான் நாட்டில் உள்ள ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று சோயுஸ் எம்.எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்துடன் ஃபெடரர் என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவி செய்வதற்காக இந்த ரோபோ 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. 1.8 மீ உயரமும் 160 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோ, ஸ்கைபோட் எஃப் 580 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ளது.

மனித உருவிலான இந்த ரோபோ, மின் இணைப்புகளை சரி செய்தல், தீயணைப்பான்களை பயன்படுத்துதல் போன்ற பணிகளை விரைவாக செய்யும் என கூறப்படுகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு, அமெரிக்கா விண்வெளி மையமான நாசா, ரோபோனாட்-2 என்ற மனித ரோபோவை அனுப்பியது. ஆனால் அது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 2018 ஆம் ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.