ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 17 ஜனவரி 2019 (16:45 IST)

தான் வளர்த்த முதலைக்கே இரையான பெண்..! வாயில் துணியை கட்டிகொண்டு மன்னிப்பு கேட்ட முதலை!

இந்தோனேசியாவில் பெண் விஞ்ஞானியை அவர் வளர்த்து வந்த முதலையே கடித்து கொதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
இந்தோனேசியாவின் சுலவேசி தீவைச் சேர்ந்த  டெசி துவோ ( 44) என்பவர் செல்ல பிராணியாக முதலைகுட்டியை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
 
ஆராய்ச்சியாளரான டெசி துவோ இந்தோனேசியாவில்  உள்ள வட சுலவேசியில் மினாஹாசா என்ற இடத்தில் ஆய்வுக்கூடம் வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
 
அப்போது அவர் தனது ஆய்வுக் கூடத்தின் அருகில் ஒரு முதலையை செல்லப் பிராணியாக எடுத்து குட்டியிலிருந்தே வளர்த்து வந்தார். அந்த முதலைக்கு மேரி என்று பெயரிட்ட அவர் முதலையுடன் மிகவும் பற்றுடன் நடந்துகொள்வாராம். 
 
ஆனால் பாசமாக வளர்த்த அந்த முதலை டெசி துவோவை கடித்து கொன்று அவரின் இரைச்சியயை ஒன்று விடாமல் தின்றுள்ளது. இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை  உண்டாக்கியுள்ளது. 
 
இதைப்பற்றி அங்கிருந்தவர்கள் கூறுகையில், முதலைக்கு உணவு வழங்கும் போது அவரது கைகளை முதலை கடித்து தின்று விட்டது.
 
இதனால் தண்ணீரில் விழுந்த அவரது வயிற்றுப் பகுதியையும் முதலை தின்று விட்டதாக தெரிவித்தனர். குட்டியாக இருந்தபோது எடுத்து வளர்த்த இந்த முதலை தற்போது 14 அடி நீளம் உள்ளது. 
 
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றல் , முதலையை பெண் விஞ்ஞானி எந்த அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக வளர்த்து வந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. 


 
தனக்கு இரையிட்டு வளர்த்த முதலாளியை கொன்று தின்ன முதலையை கயிறு போட்டு கட்டி வாயில் துணியை சுற்றி கட்டியுள்ளனர்.