புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (08:57 IST)

அகதிகள் தஞ்சமடைந்த தேவாலயத்திலும் குண்டு மழை! – இஸ்ரேல் தொடர் தாக்குதல்!

இஸ்ரேல் – பாலஸ்தீனிய ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே போர் நடந்து வரும் நிலையில் காசா முனையில் அகதிகள் அடைக்கலம் புகுந்த சர்ச்சை இஸ்ரேல் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இஸ்ரேல் – பாலஸ்தீனிய ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் மூண்டுள்ள நிலையில் ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதியான காசா முனையில் இஸ்ரேல் கடுமையான போரை நடத்தி வருகிறது. இதனால் காசா முனையில் உள்ள மக்களை வெளியேறவும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து காசாவிலிருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். சுமார் 26 லட்சம் வசிக்கும் காசாவிலிருந்து 10 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் அகதிகள் வெளியேறும் சாலை, காசாவின் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழையில் 600 பேர் வரை பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அகதிகளாக மக்கள் தஞ்சமடைந்திருந்த காசா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது இஸ்ரேல் தற்போது குண்டு வீசி தாக்கியுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் வெளியுறவு அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக உலக நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Edit by Prasanth.K