வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (07:30 IST)

இன்று சிறையிலிருந்து விடுதலையாகும் தாய்லாந்து முன்னாள் பிரதமர்.. தண்டனை குறைப்பு..!

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ரா இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். 
 
அரிசி மானிய திட்டத்தில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக தக்சின் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவருக்கு அவர் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தக்சின் கடந்த ஆண்டு சரணடைந்தார். அதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உடல்நலக் குறைவால் சிறையிலிருந்து 6 மாதம் தக்சின் மருத்துவமனை காவலில் இருந்தார் 
 
இந்த நிலையில் தக்சினின் சிறை தண்டனை ஓராண்டாக குறைக்கப்பட்ட நிலையில் அவர் இன்று விடுதலை செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்த தக்சின் ஷினவத்ரா  ஆட்சியில் இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதற்காக தனக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்பதை அறிந்த அவர் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விடுதலையாகும் தக்சின் ஷினவத்ராவுக்கு 74 வயது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva