அவங்க மேல சோதனை போடுறதுல என்ன தப்பு? - சீன பயணிகள் சோதனைக்கு WHO ஆதரவு!
சீனாவிலிருந்து செல்லும் பயணிகளுக்கு மற்ற நாடுகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதை உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்தாலும் சமீபமாக மிகவும் குறைந்திருந்தன. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக உள்ளது. மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ளன.
சீன பயணிகளை மட்டும் கொரோனா சோதனைக்கு உட்படுத்துவது சீனாவை அவமதிக்கும் செயல் என சீன அரசு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. ஆனால் சீனாவில் ஏற்படும் பாதிப்பு, பலி எண்ணிக்கை குறித்த தரவுகளை உலக சுகாதார அமைப்பிற்கு சீனா வழங்க மறுக்கிறது.
இந்நிலையில் இந்த கொரோனா சோதனை சர்ச்சை குறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இந்த நிலையில் சில நாடுகள் தங்கள் குடிமக்கள் பாதுகாப்பிற்காக கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் சோதனை மேற்கொள்வதை புரிந்துகொள்ள முடிகிறது” என ஆதரித்து பேசியுள்ளார்.
Edit By Prasanth.K