இத்தாலியில் சிக்கிய தமிழக மாணவர்கள்: மீட்க சொல்லி கோரிக்கை!
இத்தாலியில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் தங்களை மீட்க சொல்லி கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பரவி வருகிறது. இதுவரை கொரோனாவால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகளில் சீனாவுக்கு பிறகு, இத்தாலியில் அதிகமான கொரோனா உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இதனால் இத்தாலி முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவி வரும் 11 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் வெளி பயணங்கள் செல்வதற்கும், பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தை சேர்ந்த 55 மாணவர்கள் இத்தாலியில் சிக்கியுள்ளனர். இத்தாலியில் மிலன் மல்பென்சா விமான நிலையத்தில் உள்ள அவர்கள் கொரோனா தகுதி சான்று இல்லாததால் இந்தியா வர முடியாமல் சிக்கியுள்ளதாகவும், இந்திய அரசு தங்களை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.