1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:30 IST)

தமிழக ஆளுனர் திடீர் டெல்லி பயணம்.. பெட்ரோல் வெடிகுண்டு சம்பவம் குறித்து ஆலோசனையா?

RN Ravi
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி திடீரென டெல்லி சென்றிருப்பதாகவும் சமீபத்தில் நிகழ்ந்த பெட்ரோல் வெடிகுண்டு குறித்து அவர் அமைச்சர் அமித்ஷாவிடம் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென தமிழக கவர்னர் ஆர்என் ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது 
 
இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.