திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (12:57 IST)

ம்யூசிக் போட்ட கைய உடைப்போம்? – இசைக்கருவிகளை உடைத்து தள்ளிய தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் இசைப்பள்ளியில் உள்ள வாத்திய கருவிகளை தாலிபான்கள் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் பெண்களை அடிமைப்படுத்துவது, கல்வி மறுத்தல் உள்ளிட்டவற்றில் தாலிபான்கள் ஈடுபடுவர் என பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பலரின் வருத்தத்தின்படியே பிற்போக்குத் தனமான செயல்களில் தாலிபான்கள் ஈடுபடுவதாக தெரிகிறது.

முன்னதாக பெண்களின் உடைக்கு கடும் கட்டுப்பாடுகள் மறைமுகமாக விதிக்கப்படுவதாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தேசிய இசை அகாடமிக்குள் புகுந்த தாலிபான்கள் அங்கிருந்த பல நாட்டு இசை வாத்திய கருவிகளையும் உடைத்துள்ளனர். இந்த அகாடமியில்தான் நாட்டின் முதல் பெண்கள் இசை நிகழ்ச்சியான ஸோரா நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.