திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (09:12 IST)

தாலிபான்களை கொன்று குவித்த போராளிகள் குழு? – ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் மற்றுமொரு போராளி குழுவுக்கும் இடையே நடந்த மோதலில் 600 தாலிபான்கல் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் மொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றியுள்ளனர். ஆனாலும் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகே உள்ள பஞ்ச்ஷீர் மாகாணம் மட்டும் தாலிபான்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

அங்குள்ள பஞ்ச்ஷீர் போராளிகள் குழுவினர் 1990கள் முதலாகவே தாலிபான்களை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது பஞ்ச்ஷீரை அடைய தாலிபான்கள் போராளிகள் குழுவுடன் மோதியதில் 600 தாலிபான்களை கொன்று விட்டதாக பஞ்ச்ஷீர் போராளிகள் குழு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.