1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:30 IST)

போர் நிறுத்தம் - தாலிபன்களிடன் பணிந்த பஞ்ச்ஷிர் போராளிகள்?

தேசிய எதிர்ப்பு முன்னணி படையினர் தாலிபன்களுக்கு எதிரான போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தகவல். 
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் மொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றியுள்ளனர். ஆனாலும் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகே உள்ள பஞ்ச்ஷீர் மாகாணம் மட்டும் தாலிபான்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
 
அங்குள்ள பஞ்ச்ஷீர் போராளிகள் குழுவினர் 1990கள் முதலாகவே தாலிபான்களை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது  பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு முன்னணி படையினர் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தலிபான்களின் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து தேசிய எதிர்ப்புப் படையினர் பணிந்துள்ளனர். பஞ்ச்ஷிர் மாகாணத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் தலிபான்களுக்கு தேசிய எதிர்ப்பு முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.