1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (16:22 IST)

காவிரி, ஸ்டெர்லைட் விவகாரம்: கொட்டும் மழையில் தைவான் நாட்டில் தமிழர்கள் போராட்டம்!

நேற்று தைவானில் வாழும் தமிழக மக்கள் கொட்டும் மழையில் ஒன்றாக சேர்ந்து காவிரி, ஸ்டெர்லைட் விவகாரத்திற்காக போராட்டம் நடத்தினர்.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், தூத்துக்குடியில் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகத்தில் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், நேற்று தைவான் நாட்டில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, அங்குள்ள தேசிய பல்கலைக்கழகத்தில், கொட்டும் மழையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.
 
இந்த போராட்டம் தைவான் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் தலைமையில் நடந்தது. போராட்டத்தில் பதாகைகளை ஏந்தி தைவானில் வாழும் தமிழ் மக்கள் விவாசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற வலியுறுத்தினர்.