வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (08:46 IST)

யூத வழிபாட்டு தலத்தில் ஆசாமி மர்ம தாக்குதல்! – அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் மர்ம ஆசாமி நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் நகரின் அருகே உள்ள ராக்லேண்ட் கவுண்டி பகுதி யூத மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் பகுதியாகும். நேற்று முன்தினம் யூத விழாவான ஹனுகா கொண்டாடப்பட்டது. இதற்காக யூத மத குருவின் வீட்டிற்கு சென்று 100க்கும் மேற்பட்ட யூத மக்கள் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது திடீரென அங்கு நுழைந்த மர்ம ஆசாமி நீளமான கத்தியை கொண்டு அங்கிருந்த மக்களை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். அவர்களை தாக்கி விட்டு யூத ஆலயத்துக்குள் ஓட அந்த நபர் முயன்றபோது ஆலயத்தின் கதவுகளை அடைத்துள்ளனர்.

சம்பவம் அறிந்து உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் மர்ம ஆசாமியை கைது செய்துள்ளனர். கத்திக் குத்து சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 5 பேரை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வழிபாட்டுக்கு சென்ற மக்கள் மீது திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நியூயார்க் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.