திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (16:22 IST)

சோமாலியாவில் கார் குண்டு வெடிப்பு – 73 பேர் பலி!

சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 73 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. சமீப காலங்களில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சோமாலியா தலைநகர் மோகதிஷூவின் அருகே உள்ள அரசின் வரி அலுவலகம் அருகே காரில் இருந்த குண்டு வெடித்ததில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.