வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (13:18 IST)

சீனர்களுக்கு உணவு கிடையாது! – போர்டு வைத்த ஹோட்டல்கள்!

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மற்ற நாடுகளில் சீனர்களுக்கு தடை விதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸால் சீனாவில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் சீனாவிலிருந்து தங்கள் நாட்டு மக்களை மற்ற நாடுகள் விமானங்களை அனுப்பி திருப்பி அழைத்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் பலவற்றில் சீனர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கொழும்புவில் உள்ள உணவகங்கள் சிலவற்றில் சீனர்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில நாடுகளில் தங்கும் விடுதிகள் முதற்கொண்டு பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் சீனர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.