1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (07:53 IST)

கொரோனா வைரஸ் பீதி – தமிழநாட்டில் 68 பேர் மேல் சந்தேகம் !

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் சீனாவில் இருந்து சென்னைக்கு வந்துள்ள 15000 பேரும் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் பகுதியிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 3000க்கும் மேற்பட்ட மக்களை தாக்கியுள்ள நிலையில் நேற்று பலி எண்ணிக்கை வரை 106 ஆக உயர்வடைந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. வைரஸ் தாக்கியதில் 500க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சீனாவில் சென்னைக்கு வந்த 15000 பேரும் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில் 68 பேரைக் கண்காணிப்பில் வைத்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதில் 58 பேர் இந்தியர்கள் மற்றும் 10 பேர் சீனர்கள். வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் சாத்தியம் நிறைந்த பகுதிகளில் இந்தியா ஒன்றாக உள்ளது. அதிகளவில் சீனாவில் இருந்து பயணிகள் விமானம் மூலம் இந்தியா வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.