1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 23 டிசம்பர் 2024 (08:00 IST)

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

சமீபத்தில் இலங்கை அதிபராக பதவியேற்ற அனுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு அரசு முறையை சுற்றுப்பயணம் செய்தார் என்பதும், பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதும் தெரிந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையை நோக்கி செல்ல இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இந்திய பயணத்தை முடித்த கையோடு அடுத்ததாக இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க சீனாவுக்கு அரசு முறை பயணமாக செல்ல இருப்பதாக வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் சீனா செல்ல இருப்பதாகவும், சீன முதலீடுகளை இலங்கையில் அதிக அளவில் ஈர்க்க இந்த பயணம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு இலங்கை மற்றும் சீன அதிபர்கள் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நட்புறவுடன் இருக்க இலங்கை விரும்புவதாக இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva